The Blog

பாவேந்தரின் இலக்கியங்களின் பெருமையை தமிழர்களாகிய நாம் மட்டுமல்ல, மேலை நாட்டவரும் உணரந்தேயிருந்தனர்.

1962-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் செக்கோச்லேவேகியாவிலிருந்து (Czechoslovakia) பாவேந்தரின் இல்லத்திற்கு ஒரு செய்தித்தாள் வந்தது.

அதில் செக் (Czech) நாட்டு அறிஞரான முனைவர் காமில் சவெலபில் (Dr. Kamil Václav Zvelebil) என்பவர் பாவேந்தரின் சில கவிதைகளை செக் மொழியில் மொழி பெயர்த்து இவருடைய படத்தோடு அச்செய்தித்தாளில் அழகாக வெளியிட்டருந்தார். முனைவர் காமில் சவெலபில் செக் நாட்டுப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை தலைவராக பணியாற்றியவர். அவர் பாவேந்தருக்கு எழுதிய கடிதம் வாசகர்களுக்காக இங்கே இணைத்துள்ளோம். நன்றி!