About us
உலக மொழிகளுள் தொன்மையான மொழிகளில், தமிழ் மொழியும் ஒன்று என்றால் அது மிகையாகாது. அம்மொழியை தன் உயிருக்கு நிகராக போற்றி, அதன் வழியே பல அரிய கருத்துகளைக்கூறி தமிழர் வாழ்வில் சுடரொளி ஏற்றியவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்!
அமெரிக்காவின் முதல் மாநிலமாம் டெலவரில், புரட்சிக் கவிஞரின் 129வது பிறந்தநாள் விழாவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் 20 ஏப்ரல் 2019 (சித்திரை 7, தி.ஆ. 2050) அன்று இனிதே தொடங்கப்பெற்றது!
புரட்சிக் கவிஞர் தமிழ் மன்றத்தின் நோக்கம்:
- உலகத் தமிழர்களாகிய நாம், நமது தமிழ் மொழி, கலை மற்றும் பண்பாட்டை மறக்காமல் போற்றி பேணவும், நமக்கு பின்னால் வரும் நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்து கூறுவும் வேண்டும்.
- நமது தமிழ் அறிஞர்களையும், கவிஞர்களையும் மற்றும் தலைவர்களையம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது.
- வினாடி வினா, ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் இதர போட்டிகள் நடத்துவதன் மூலம் பெற்றோர்களுக்கும் அவர்கள் வாயிலாக குழந்தைகளுக்கும் தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள் மற்றும் தலைவர்களின் பெருமைகளை பரைசாற்றுவது.
- தமிழ் பற்றாளர்களுக்கு மேடை பேச்சு பயிற்சி கொடுத்து அவர்களை தமிழ் அறிஞர்கள் பற்றி தகவல்களை கொடுத்து மேடையில் பேச ஊக்கமளிப்பது.
- புதிதாக பேச வருபவர்களுக்கு தலைப்பு தேர்ந்தெடுத்து கொடுப்பது, புதிய மற்றும் மாற்று கருத்துகளை பேச வாய்பளிப்பது, அதன் மூலமாக மக்களின் எண்ணத்தில் புதிய சிந்தனைகளை அறிமுகப்படுத்துவது.
- ஒரு கருத்தை பற்றி பல வல்லுனர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தி, அதன் பல புதிய மற்றும் பலவகையான பரினாமங்களை எடுத்துரைத்து சிறந்த முடிவை எடுக்கும் திறனை வளர்ப்பது.
- எந்த ஒரு கருத்தையும் ஆழ்ந்து அறிந்து மரியாதையுடன் மற்றும் கன்னியத்துடன் பிறருடன் வெளிப்படுத்தும் திறன் வளர்ப்பது.
- தமிழ்ச் சமூகத்தின் பல்துறை அறிஞர்களை அழைத்து அறிவுசார் நிகழ்ச்சி நடத்தவுது.
- தமிழ்ச் சமூகத்தின் பல்துறை அறிஞர்களின் பங்களிப்பை அங்கிகாரம் செய்து அவர்களுக்கு உரிய மரியாதை செய்வது.
- தமிழ் மொழிக்காகவும் நம் சமுதாயத்திற்காகவும் இன்னுயிர் ஈந்தவர்களை போற்றுவது, அவர்களின் தியாகங்களை நமது சந்ததிக்கு அறிமுகம் செய்வது.